ராயலா கார்ப்பரேஷனின் வைர விழா நிகழ்வின்போது, அதன் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் பிரதாப், ‘சக்கரம் சூழல்கிறபோது’(“As the wheel turns” ) என்ற தலைப்பிலான நூலை எழுதி வெளியிட்டார்.
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. பிசினஸ் உலகில் 50 ஆண்டுகள் நிறைவை ரஞ்சித் பிரதாப் கொண்டாடுகிற இத்தருணம் அவரது பயணத் தில் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல்லாக திகழ்கிறது.
1973-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த குழும நிறுவனத்தில் பணியில் சேர்ந்த ரஞ்சித் பிரதாப், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் செதுக்கி வடிவமைத்ததோடு பிசினஸ் செயற்பரப்பிலும் என்றும் அழிக்க இயலாத தடத்தை பதித்திருக்கிற ஒரு நிலைமாற்றத்திற்கான பயணத்தை தொடங்கினார்.
ராயலா கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் பிரதாப் பேசியதாவது:
நிறுவனத்தின் வைர விழாவையும், நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதில் எனது 50 ஆண்டுகள் நிறைவையும் மற்றும் நினைவுகளைப் பகிரும் எனது புத்தக வெளியீட்டையும் ஒருங்கிணைத்து நாங்கள் கொண்டாடுகிறோம்.
ஆட்டோமொபைல் அசெம்பிளி என்பதிலிருந்து ஆர்கானிக் / இயற்கை விவசாயம் என்பதை நோக்கிய ஒரு அழகான வரலாறாக ராயலாவின் பயணம் இருக்கிறது. கடந்த பல தசாப்தங்கள் அடங்கிய காலகட்டத்தில் பிசினஸ் சூழலில் அழியாத தடத்தை ராயலா குழுமம் பதித்திருக்கிறது குறித்து பெருமை கொள்கிறேன்.
அழகான பெருநகரமான இச்சென்னையின் வளர்ச்சிக்கு எமது பங்களிப்பாக இங்கு காணப்படும் பல்வேறு பிரபலமான கட்டிடங்கள் நேர்த்தியான சாட்சியமாகத் திகழ்கின்றன என்றார்.