சென்னையை தலைமை யிடமாகக் கொண்ட கசான்ஜி ஜூவல்லர்ஸ் லிமிடெட், அதன் இனிஷியல் பப்ளிக் ஆஃபர் -உடன் (IPO), ரூ. 10 மதிப்புள்ள 6910000 ஈக்விட்டி பங்குகளை ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.140 என்ற ஒரு மாறா விலையில் (ஒரு பங்கிற்கு பிரீமியமாக ரூ. 130 உட்பட), ரூ. 96.74 கோடியைத் திரட்ட வெளிவருகிறது.
கசான்ஜி, மார்கெட் மேக் கர்க்காக 346000 ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ளவற்றிலிருந்து. இது HNI-களுக்கு 50% மற்றும் ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு 50% ஒதுக்கியுள்ளது.
IPO மூலம் பெறப்படும் நிகர நிதியிலிருந்து, இந்நிறுவனம் ரூ. 8.62 கோடியை புதிய ஷோரூம்கள் திறப்பதற்கும், ரூ.20 கோடியை புதிய ஷோரூம்களுக்கான இருப்புப் பொருட்களுக்கும் ரூ. 55 கோடியை நடப்பு மூலதனத்திற்காகவும் மற்றும் ரூ. 12 கோடியை நிறுவனத்தின் பொதுப்படையான நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும்.
மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டில், நிகர லாபமாக ரூ. 7.57 கோடியுடன் அதன் விற்றுமுதலாக ரூ. 481.82 கோடியை பதிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் அதன் நற்சாட்சிப் பத்திரமாக BSE லிமிடெட் (அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தை)-ன் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த IPO பங்கு வெளியீடு வரும் 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடைகிறது. வர்த்தகத்திற்கான சந்தை லாட் 1000 பங்குகளாக இருக்கும். பங்குகள் BSE SME இல் பட்டியலிடப்படும்.