பல்லடம் நகராட்சி சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின் மூலமாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டன. அதே போல பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இதனை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். பல்லடம் நகராட்சி தலைவர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் பல்லடம் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர்கள், அனைத்து காவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க நிர் வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.