கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி வட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின் ஆகியோர் உள்ளனர்.