fbpx
Homeதலையங்கம்‘புதுமைப் பெண் திட்டம்’- 2-ம் கட்டமாக 28 கல்லூரிகளைச் சேர்ந்த 1534 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000...

‘புதுமைப் பெண் திட்டம்’- 2-ம் கட்டமாக 28 கல்லூரிகளைச் சேர்ந்த 1534 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி: ‘பெண்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும்’

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 1368 மாணவிகள் மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை பெறுகின்றனர். இரண்டாம் கட்டமாக 28 கல்லூரிகளில் பயின்று வரும் 1534 மாணவிகளுக்கு உதவித்தொகை, முதல்மாத தவணை ரூ.1000/- செலுத்தப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் பெற்று சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மகளிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்தஅரசு பரிவுடன் செயல்படுத்தும் திட்டங்களுக்கு அடையாளமாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை’ என மாற்றம் செய்துள்ளது.

இத்துறையின் மூலம் பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் ஆகியோர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதிசெய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்க ளாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாகவும், அரசுப் பள்ளிகளில் மாணவி களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் ‘புதுமைப் பெண்’ என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் வேண்டும்.

மாணவிகள் 8 அல்லது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தில், சான்றிதழ் படிப்பு (Certificate Course) பட்டயப் படிப்பு (Diploma/IT/D.TEd., Courses), இளங்கலைப் பட்டம் (ஙிணீநீலீமீறீஷீக்ஷீ (Bachelor Degree – B.A, B.Sc., B.Com., B.B.A, B.C.A., and all Arts & Science, Fine Arts Courses தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech., M.B.B.S., B.D.S. B.Sc. (Agri.), B.V.Sc.. B.Fsc, B.L., etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு(Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.,)போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 18 கல்லூரிகளில் பயிலும் 1368 மாணவிகள் மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 28 கல்லூரிகளில் பயின்று வரும் 1534 மாணவிகளுக்கு உதவித்தொகை முதல்மாத தவணை ரூ.1000/- செலுத்தப்பட்டது.

“படிப்பைத் தொடர்கிறேன்”

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் த.காமாட்சி தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் கலவை என்ற கிராமத்தில் நடுத்தரமான குடும்பத்தில் வசிக்கிறேன்.

தாயார் த.பிரேமா. தந்தை இல்லை. அம்மா கூலி வேலை செய்கிறார். ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறேன். இந்நிலையில் முதல்வர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகள் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று படிக்க ஏதுவாக ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஏழை குடும்பத்தைச் சார்ந்த பெண்கள்பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்கல்வி தொடர்வது என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வரின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரி படிப்பினை தொடர வழிவகுத்து கொடுத்துள்ளார்.

இத்திட்டத்தில் கிடைக்கும் தொகையை கொண்டு, என் படிப்பு செலவிற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும், பேருந்து, இதர செலவிற்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் புத்தகங்கள் வாங்கி தயார் செய்திட பயனுள்ளதாக இருக்கும்.முதல்வருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

“தேர்வு கட்டணம் செலுத்துவேன்”

எம்.ஆர்த்தி தெரிவித்ததாவது: ராணிப்பேட்டை மாவட்டம், விளாப்பாக்கம் பேரூராட்சியில் வசித்து வருகிறேன். அப்பா ம.மதியழகன், அம்மா ம.சரிதா. பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். குறைந்த வருவாயைக் கொண்டு தான் விளாப்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு சேர்த்தனர்.

தற்போது மேல்விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரியில் B.E (ECE) 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர்களுக்கு என் கல்விக்கான செலவு குறையும். இத்தொகை படிப்பு செலவிற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏழைப் பெண்களின் கல்லூரி கனவினை நனவாக்கி முன்னேற்றத்திற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தினை வழங்கிய முதல்வக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
செ.அசோக்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ராணிப்பேட்டை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img