fbpx
Homeபிற செய்திகள்பட்டா மாறுதலில் மனுக்களை முறையாக ஆய்வு செய்யாமல் தள்ளுபடி செய்ய கூடாது அதிகாரிகளுக்கு இராணிப்பேட்டை ஆட்சியர்...

பட்டா மாறுதலில் மனுக்களை முறையாக ஆய்வு செய்யாமல் தள்ளுபடி செய்ய கூடாது அதிகாரிகளுக்கு இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா அறிவுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறையின் மாதாந்திர பணி ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வருவாய்த் துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழ் தொடர்பான மனுக்கள் நிலுவை, ஒப்புதல் அளிக்கப்பட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும் நிராகரிக்கப்பட்டவைகள் அதற்கான காரணங்கள் குறித்து ஒவ்வொரு வட்டம் வாரியாக கேட்டறிந்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருமானச் சான்றி தழ் வழங்கும் மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தள்ளு படி செய்யப்படும் மனுக்கள் மீது முறையான விசாரணை அறிக்கை மனுதாரருக்கு வழங் கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு வகையிலான மனுக்கள் நிலுவை பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மனுக்கள் பிரிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பெறப்படும் மனுக்கள். மனுதாரருக்கு பதில், நடவடிக்கை எடுக்கப்பட்டவை குறித்து விரிவாக கேட்டறிந்தார். நீண்ட நாள் நிலுவை மனுக்களை உடன டியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். முறையான பதிலை மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, பட்டா வழங்கும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது ஒவ்வொரு வட்டம் வாரியாக முடிக்கப்பட்ட பணிகள், நிலுவை பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கண்டார். பட்டா மாறுதல் வேண்டி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலதாமதம் செய்யாமல், அலைக்கழிக்காமல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் சர்வேயர்கள் பணியாற்ற வேண்டும். சர்வேயர்கள் 30 நாட் களுக்குள்ளாக பணிகளை முடிக்க வேண்டும். துணை வட்டாட்சியர்கள் 15 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பட்டா மாறுதலில் மனுக்களை முறையாக ஆய்வு செய்யாமல் தள்ளுபடி செய்ய கூடாது. இது குறித்து புகார் வரப் பெற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நீதிமன்ற வழக்குகள், நிலுவைகள் குறித்தும் ஒவ்வொரு வட்டம் வாரியாக கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகள் முறையாக முடிக்க கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து வட்டங்கள் வாரியாக ஆய்வு மேற்கொண்டார். இதன் அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆகவே, நிலுவையில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி களை விரைவாக முடிக்க கேட்டுக் கொண்டார். இதுபோன்று வருவாய் துறையின் அனைத்து பணிகள் முன்னேற்றங்கள் குறித்தும் நிலுவையில் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், வருவாய் கோட் டாட்சியர்கள், துணை வட்டாட் சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img