fbpx
Homeபிற செய்திகள்அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்: தர்மபுரி கிழக்கு மாவட்ட...

அனைத்து ஒன்றியங்களிலும் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்: தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. தீர்மானம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாநில நிர்வாகிகள் தாமரைச் செல்வன், செந்தில்குமார், மாவட்டத் துணைச் செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார்.

கூட்டத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆ.மணி எம்.பி. கலந்து கொண்டு சென்னையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் 2026 சட்ட மன்ற தேர்தல் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நாடு போற்றும் நான் காண்டு – தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். மதுரை மாநகரில் ஜூன் மாதம் 1 -ம் தேதி நடைபெறும் பவள விழா கண்ட தி.மு.க. பொதுக்குழு கூட் டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது, கட்சி யின் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தீவிர களப்பணி யாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி துரைசாமி, நடராஜ், சோலைமணி, வேலுமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், கலைச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்லமுத்து, வைகுந்தம், காவேரி, செல்வராஜ், மடம் முருகேசன், வீரமணி, கருணாநிதி, பேராட்சி செயலாளர்கள் வீரமணி, சண்முகம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், பேரூராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img