fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிவுரை

கோவை, துடியலூர் அருகே வட்டமலைப் பாளையத்திலுள்ள ஸ்ரீராம கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

முதலாமாண்டு மாணவர்களை, இரண் டாமாண்டு மற்றும் மூன் றாமாண்டு பயிலும் சீனியர் மாணவ,மாணவியர்கள் பூகொத்து கொடுத்து வர வேற்பு அளித்தனர்

ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர். என் உமா வரவேற்றார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங் களின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் என்.ஆர்.அலமேலு பேசும் போது, தற்போதைய காலகட்டத்தில் தொழில் நுட்ப யுகத்தில் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறன் படைத்தவர்களை எதிர்பார்க்கின்றனர்.

சவால்களை சமாளிக்கும் பக்குவம்

புதிய வித்தியாசமான, கோணத்தில் செயல்படவும், பிரச்சனைகளுக்கு உடனுக் குடன் தீர்வு காணவும், சவால்களை சமாளிக்கும் பக்குவத்தினையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்றார் .

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடந்த கல்வியாண்டில் வாரிய தேர்வில் முதலிடம் பெற்ற ஒவ்வொரு துறையை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

முதலாமாண்டு மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கணிப்பொறி துறைத் தலைவர் டாக்டர் கே.ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img