fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் சிலம்பாலயா மாணவ, மாணவிகள் சாதனை

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் சிலம்பாலயா மாணவ, மாணவிகள் சாதனை

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி பிப்ரவரி மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நேற்று (22ம் தேதி) அன்று மதியம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி தாளாளர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

சிலம்பாலயா பயிற்சி பள்ளியில் பயின்ற மணி மேல்நிலைப் பள்ளி மாணவர் அபிமன்யு இரட்டை கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு பிரிவில் இரண்டு தங்க பதக்கம் வென்றார். கார்மல் கார்டன் பள்ளி மாணவர் மித்ரேஷ்ராம் மான் கொம்பு வீச்சு வெள்ளி பதக்கம் வென்றார்.

ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் நிக்கிலேஷ் அலங்கார கம்பு வீச்சில் வெண்கல பதக்கம் வென்றார். நேஷனல் மாடல் பள்ளி மாணவி அக்ஷதா அலங்கார சிலம்பம் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி மேரிபிரியதர்ஷினி சுருள் வாள் வீச்சு வெள்ளி பதக்கம் வென்றார்.

தங்க பதக்கம்

கல்லூரி மாணவிகள் பிரிவில் இராமகிருஷ்ண கலை அறிவியல் கல்லூரி மாணவி மிருதுளா இரட்டை சிலம்பம், அலங்கார சிலம்பம், மான் கொம்பு வீச்சு வீச்சு ஆகிய மூன்று பிரிவுகளில் தங்க பதக்கம் வென்றார். சுருள் வாள் வீச்சு வெள்ளி பதக்கம் வென்றார்.

பொது பிரிவில் அருண் பாண் டியன் சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு பிரிவில் இரண்டு தங்க பதக்கம் வென்றார். அலங்கார சிலம்பம், இரட்டை கம்பு வீச்சு பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

சரண்ராஜ் இரட்டை கம்பு வீச்சு, அலங்கார சிலம்பம், ஒற்றை கம்பு வீச்சு ஆகிய பிரிவுகளில் மூன்று தங்கப் பதக்கம் வென்றார். மான் கொம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பாலயா தலைமை ஆசிரியர் செல்வக்குமார், பயிற்சியாளர் ரஞ்சித்குமார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றோர் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img