fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ‘வணிகத்தில் புதுமை விருது’ வழங்கும் விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ‘வணிகத்தில் புதுமை விருது’ வழங்கும் விழா

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில், “FORZA 2K23” என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான மேலாண்மை நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் நேற்று (17ம் தேதி) நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனை வர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர் ஜெ.பாமினி வரவேற்றார்.

வணிகத்தில் புதுமை விருது

கீரைக்கடை அக்ரோ ஃபார்ம்ஸ் மற்றும் கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.ஸ்ரீராம் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவருக்கு “வணிகத்தில் புதுமை விருது” மேலாண்மைத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் மேலாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img