fbpx
Homeபிற செய்திகள்ஜான் தேவவரம் அறக்கட்டளை ஏழை மாணவர்களுக்கு உதவி

ஜான் தேவவரம் அறக்கட்டளை ஏழை மாணவர்களுக்கு உதவி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், இயங்கிவரும் ஸ்பீச் மற்றும் ஆர், சி.பி. டி.எஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜான்தேவ வரத்தின் 7-வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவிதொகை

நிகழ்ச்சிக்கு, ஜான் தேவவரம் நினைவு அறக்கட்டளை நிர்வாகி பொற்கொடி தேவவரம் தலைமை வகித்தார். நிகழ்ச் சியில், திருச்சுழி பகுதியில் உயர் கலவி பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது.

மேலும், அறக்கட்டளை சார்பாக காரியாபட்டி மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர்கள் முருகன், சாமிக்கண்ணு, குருசாமி , முன்னாள் தலைவர் சிவாஜி பாலன், ஜான். தேவவரம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜெய்சிங் தேவநேசன், ராஜாசிங் லூகாஸ், ஸ்பீச் நிறுவன நிதி இயக்குனர் செல்வம், மக்கள் தொடர்பாளர் பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img