தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிரப்பும் மையத்தை துவக்கியுள்ள விஜய் ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இ& திருமலா மில்க் புராடக்ட் 18 வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு கருவிகளை பொருத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தினர் தெரிவித்ததாவது: பசுமை புரட்சியின் மற்று மொரு அங்கமாக வாகனங்களை இயற்கை எரி வாயுவில் இயக்கி இ கார்பனை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
முன்பு இந்த வாகனங் கள் அனைத்தும் டீசல் இன்ஜின்களைக் கொண்டிருந்தது. பரி சோதனை திட்டமாக கோவை பெங்களுரு இடையே இயங்கும் காண்டி டிராவல்ஸ் பொள்ளாச்சி – காங்கேயம் இடையே இயங்கும் கேபிடி மொபசல் பஸ் போன்றவை சிஎன்ஜிக்கு விஜய் ஆயில் அன்ட் கேஸ் நிறுவனம் மாற்றியது.
இதன் வெற்றிக்கு பின்இ 20 எய்சர் இன்ஜின் கொண்ட பால் டிரக்குகளை சிஎன் ஜிக்கு மாற்றியது. இந்த நிறுவனம் 100 டன் திறன் வரை 407 பிக் அப் வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்ற அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதில் டாடா, மஹிந்திரா, எய்ச்சர், பாரத் பென்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங்களின் வாகனங்களின் இன்ஜின்களை சிஎன்ஜிக்கு மாற்ற அனுமதி பெற்றுள்ளது.
வாகனத்தில் நிரப் பப்பட்டுள்ள எரிபொருள் அளவு குறித்த குறுஞ்செய்தி டிரைவருக்கு அவ்வப்போது கிடைக்கும். அதோடு ஏதாவது எரிபொருள் வீணாகிறதா என்பது பற்றியும் இதில் இருக்கும். இதற்கென ஜியோலட் கிட் இந் திய அரசின் ஐசிஏடி அங்கீகாரம் பெற்று பயன்படுத்தப்படுகிறது.
தூய்மையான, பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்துவதால் இன்ஜின் மற்றும் இன்ஜின் ஆயில் ஆயுள் காலம் மற்றும் திறனும் அதிகரிக்கிறது.
இந்த முயற்சியால் எதிர்காலத்தில் ஒரு பசுமையான தூய்மை யான சுற்றுச் சூழலை உருவாக்க முடியும் என நம்புகிறோம். இந்த வகையில் திருப் பூர் முதல் முறையாக ஒரு சிஎன்ஜி பஸ்சை பெறுகிறது. விஜய் ஆயில் அன்ட் கேஸ் கம்பஸ்சன் அமைப்பிற்கு மிக்க நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
துவக்க விழா
இதற்கான துவக்க விழா செங்கப்பள்ளியில் உள்ள ஐஓசிஎல் கோகோ பம்ப் பில் நடந்தது. தலைமை விருந்தினராக திருமலா மில்க் புராடாக்ட்ஸ் விநி யோகத்தொடர் இயக்குனர் அருண் செல்வக்குமார் பங்கேற்றார்.
விழாவில் கோவை இந்தியன் ஆயில் நிறுவனத்தின், பொது மேலாளர், ஆர். ஆதவன், சில்லறை விற்பனை, முதுநிலை மேலாளர், பிரியா பழனி, அதானி குழுமத்தின், முது நிலை துணைத் தலைவர், ராஜேஷ் பிரபு மற்றும் விஜய் கேஸ் சர்வீஸ், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் உட் பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஐஓசிஎல் ‘ பொதுமேலாளர் பேசியதாவது :- பெட்ரோல், டீசல் பயன்பாடு நீண்ட காலத்துக்கு போதுமா னதாக இருக்காது. போக்குவரத்தில் வாகனங்கள் மாற்று எரிபொருளுக்கு விரைவில் மாறுவது என்பது, செலவு சிக்கனத்துக்கும், சுற்றுச்சூழல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.
இந்த வகையில், இந்த வட்டார பஸ் முதலாளிகள் துணிந்து சி.என்.ஜி எரிபொருள் பயன்பாட்டுக்கு முன் வந்தது பாராட்டுக்குரியது, என்றார்.