fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப் பின் டெஸ்டா ஸ்குவாட் கமாண்டர் லெப்டினென்ட் ஈசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எதிர்கால இந்தியாவாகிய மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா பொறுப்புள்ள இந்திய குடி மக்களாக திகழ மாணவிகள் செய்ய வேண்டியவை பற்றி எடுத்துரைத்தார்.
இந்தியநாடு மற்றும் சுதந்திர போராட்டம் பற்றி மாணவிகள் உரை நிகழ்த் தினர்.
தேசிய மாணவர் படையினரின் நிகழ்ச்சியோடு விளையாட்டுத்துறையினரின் தற்காப்புக்கலையான சிலம்பம், நாட்டு நலப் பணித் திட்டத் தினரின் விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவுகூறும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற் றன. மாணவிகளின் கலை நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img