இந்திய பட்டயக்கணக்காளர் நிறுவனம் சார்பில் சி.ஏ இன்டர்மீடியட் எனப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வு கடந்த மே மாதம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்படி, பி.காம் பிரபஷனல் அக்கவுண்டிங் துறை மாணவர்கள் ஜி.சுகுமார், ஜி.கௌதம், எஸ்.சாயூஜ், பி.விபின், பி.பகத்சிங், ஏ.முத்துசுதர்சன், எம்.சுகன், ஏ.பிரவீன், என்.பரத்குமார், கே.கௌதம், எம்.ஜனார்த்தனசக்தி, பி.காம் சி.எம்.ஏ துறை மாணவி எஸ்.ஸ்ரீநிதி ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ இன்டர் மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி பாராட்டினார்.
இதேபோல், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், பி.காம்., பிரபஷனல் அக்கவுண்டிங் துறை தலைவர் சந்தானகிருஷ்ணன், பி.காம் சி.எம்.ஏ துறை தலைவர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.