fbpx
Homeபிற செய்திகள்பெண்களை கௌரவிக்கும் வீ வொண்டர் வுமன் விருது

பெண்களை கௌரவிக்கும் வீ வொண்டர் வுமன் விருது

பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும் வீ வொண்டர் வுமன் விருதுகளின் 7வது பதிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

கோவையை சேர்ந்த வீ வொண்டர் வுமன் தொண்டு நிறுவனம், வணிகம், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் செயல் பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் 7வது பதிப்பின் தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதற்கான பதாகைகளை திரைப்பட இயக்குனரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

புது தில்லியில் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பின் (என்.சி.எஸ்.ஆர்.சி) இயக்குநரும், இந்திய ரஷ்ய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பின் (ஐஆர்ஐடிஏ) துணைத் தலைவருமான டாக்டர். கலீராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ஏ.எஸ். குமாரி ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாநாடு இதழை பார்வையாளர்களுக்கு அறிமுகப் படுத்தினர்.

மேலும் ஆகஸ்ட் 24ம் தேதி அன்று சைபர் கிரைம் விழிப்புணர்வு மாநாடு சென்னையில் நடத்துகிறது. முன்னதாக ஆகஸ்ட் 18 அன்று கோவையில் “சுதந்திர ஓட்டம்“ நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img