தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
தொடர்ந்து, தேனி மதுரை ரோடு பங்களா மேட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் முன்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. இது நேரு சிலை வரை சென்று மீண்டும் பங்களா மேட்டில் முடிவடைந்தது.
முன்னதாக, பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர்.
இதில், தேனி குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கண்ணன், மனோகரன், ராஜேஷ், இந்திரகோபால் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.