fbpx
Homeபிற செய்திகள்ராயல் கேர் செவிலியர் கல்லூரி, நீலாம்பூர் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராயல் கேர் செவிலியர் கல்லூரி, நீலாம்பூர் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராயல் கேர் செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சமீபத்தில் நிர்வாக அறங்காவலர் மற்றும் தலைவர் டாக் டர் ரி.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முனைவர் பேராசி ரியர் நி.திலகவதி ராய், கல்லூரி முதல்வர், வரவேற்புரை வழங்கினார். கல்லூரி தாளாளர் டாக் டர்.கீர்த்தனா புதிய மாணவர்களுக்கு ராயல் கேர் நர்சிங் கல்லூரி ராகிங் இல்லாத வளாகம் என்று உறுதியளித்தார்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த சூலூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் மனோஜ், இந்தியாவில் ராகிங் ஆல் ஏற்படும் சட்டரீதியான விளைவுக ளைப் பற்றி விளக்கினார். ஆபத்துக் காலங்களில் காவல்துறையினருடன் தொடர்புகொள்வதில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மருத்துவ உளவியலாளர் சுபிக்க்ஷா, ராகிங் உளவியல் தாக்கங்கள் குறித்து உரையாற்றினார். ராகிங் இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேராசிரியர் வி ஸ்மிதா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img