கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட ரத்தினபுரி மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்கமுறைத்திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
இதனை வாக்காளர் பட்டியல் அலுவலரும் மாநகராட்சி துணை ஆணையாளர் மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மேலும் ரங்கோலி கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.