fbpx
Homeபிற செய்திகள்கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பி.எஸ்.ஜி மருத்துவ குழுவினர் சாதனை

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் பி.எஸ்.ஜி மருத்துவ குழுவினர் சாதனை

குழந்தைகளின் இறுதி நிலை கல்லீரல் நோயை சிகிச்சை செய்வது மருத்துவ உலகில் மிகப்பெரிய சவாலாகும். குறிப்பாக அரிதான மரபணு குறைபாடுகளுடன் கூடிய நோயாளிகளில், உயிரைக் காப்பாற்றும் ஒரே வழி கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையாகும்.

இத்தகைய சிக்கலான நிலையில் இருந்த 15 வயது சிறுவனுக்கு பி.எஸ்.ஜி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் லிவர் டிரான்ஸ்பிளான்ட் மற்றும் ஹெச்.பி.பி அறுவைச் சிகிச்சை குழு வெற்றிகரமாக லிவிங்டோனர் லிவர் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஒரு புதிய வாழ்வை அளித்துள்ளது.

அச்சிறுவன் ஆறு வயதில் பி.எப்.ஐ.சி -3 எனப் படும் அரிய கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தாக கண்டறியப்பட்டார். காலப்போக்கில் கல்லீரல் செயலிழப்பு, போர்டல் ஹைப்பர்டென்ஷன் மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் உருவானதால், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அவசியமானது.

முழுமையான பரிசோ தனைகள் மற்றும் பல்துறை மருத்துவ குழு ஆலோசனைகளுக்குப் பிறகு, குழந்தையின் தாயார் தானம் அளிப்பவராக இருந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட் டது.
அறுவைச் சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், வெற்றிகரமாக நிறைவடைந்தது. தீவிர சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம், குழந்தையின் நிலை மேம்பட்டது. கல்லீரல் செயல்பாடு சீரடைந்தது, ரத்தப் பரிசோதனைகள் நன்றாக வந்தன, மற்றும் குழந்தை நடமாடத் தொடங்கினார். இது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img