fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் மார்ஸ் குழுமத்தின் பெட் நியூட்ரிஷன் தொழில்பிரிவின் நிர்வாக இயக்குநர் நியமனம்

இந்தியாவில் மார்ஸ் குழுமத்தின் பெட் நியூட்ரிஷன் தொழில்பிரிவின் நிர்வாக இயக்குநர் நியமனம்

மார்ஸ் இன்கார்ப்ப ரேட்டட் நிறுவனம் இந்தியாவில் செல்லப் பிராணிகளுக்கான ஊட்டச்சத்து பிரிவின் நிர்வாக இயக்குநராக மனிஷ் சியாக் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அறிவித்துள்ளது. பெடிகிரி, விஸ்காஸ், ஷீபா போன்ற செல்லப்பிராணிகளுக்கான மார்ஸ் நிறுவனத்தின் முன்னணி உணவு பிராண்டுகளின் தொழில்-வணிக செயல்பாடுகளை இந்தியாவில் மனிஷ் வழிநடத்துவார்.

மனிஷ் சியாக், நுகர் வோர் பொருட்கள் துறையில் 20 ஆண்டுகளுக் கும் மேலான அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் ஜிஎஸ்கே போன்ற பெருநிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்துள்ள இவர், 2024ல் மார்ஸ் நிறுவனத்தில் தலைமை விற்பனை அதிகாரியாக இணைந்து, இந்தியாவில் மார்ஸ்-ன் பெட் நியூட்ரிஷன் பிரிவின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். ஐஐஎம் லக்னோவின் முன்னாள் மாணவரான இவர், சிறந்த தலைமைத்துவ பண்பு கொண்டவராக அறியப்படுகிறார்.

புதிய பொறுப்பு குறித்து மனிஷ் சியாக் கூறுகையில், “இந்தியாவில் செல்லப்பிராணிகளுக்கான உணவு சந்தை அடுத்த பத்து ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும். இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் இப்புதிய பொறுப்பை ஏற்பதிலும் மற்றும் இந்தியாவில் எமது பிசினஸ் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு தலைமை வகிப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.

லண்டனில் உள்ள மார்ஸ் நிறுவனத்தின் சர்வதேசத் தலைமையகத்தில் நிறுவன உருமாற்றத்திற்கான உலகளாவிய துணைத் தலைவர் பதவி ஏற்பு குறித்து முன்னாள் நிர்வாக இயக்குநர் சலில் மூர்த்தி பேசுகையில், “மார்ஸ் பெட் நியூட்ரிஷன் நிறுவனத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த புதிய சர்வதேசப் பொறுப்பை ஏற்பதில் நான் அதிக உற்சாகம் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மார்ஸ் பெட் நியூட்ரிஷன் பிரிவின் பிராந்தியத் தலைவர் பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் கூறுகையில், “மார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமான ஒரு சந்தை. திறமையான தலைவர்களை உருவாக்குவதிலும், இந்தியச் சந்தையை வலுப்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img