என்.எல்.சி. சார்பில் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்கள், இளை ஞர்கள், இளம்பெண்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி வட்டம் 10-ல் உள்ள பாரதி விளையாட்டு அரங்கத்தில் கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் கிரிக் கெட், கபடி, கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 2100 பேர் ஆர்வத்து டன் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.
இதன் நிறைவு விழா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் என்.எல்.சி. தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். சுரங்க இயக்குனர் டாக்டர் சுரேஷ்சந்திரசுமன், மனிதவளத்துறை இயக்குனர் சமீர்ஸ்வரூப், நிதித்துறை இயக்குனர் டாக்டர் பிரசன்னகுமார் ஆச்சார்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் என்.எல்.சி. அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.