fbpx
Homeபிற செய்திகள்பழைய பேருந்து நிலைய பொது கழிவறையில் சுகாதார கேடு புகார்: நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் திடீர்...

பழைய பேருந்து நிலைய பொது கழிவறையில் சுகாதார கேடு புகார்: நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் திடீர் ஆய்வு

நாமக்கல் டவுன் பஸ் நிலையம் உள்ளே அமைந்துள்ள கழிவறையை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி திடீர் ஆய்வு செய்தார். அப்பொழுது கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி உடனுக்குடன் சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.

அது மட்டுமின்றி கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டி உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். கழிவறைகள் சுத்தமாக இல்லாவிட்டால் நோய் தாக்கும் அபாயம் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து மாநகராட்சி ஆணையாளரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட பிரச்சினைகளை எடுத்துக் கூறி சரி செய்ய அறிவுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் திடீர் ஆய்வு டவுன் பஸ் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த ஆய்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் பிஎஸ் என்எல் ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான ஆர்எஸ்ஆர் மணி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜா, மற்றும் வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img