fbpx
Homeபிற செய்திகள்கரூரில் இளையராஜா இசை நிகழ்ச்சி-திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்

கரூரில் இளையராஜா இசை நிகழ்ச்சி-திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்

கரூரை அடுத்த கோடங்கிபட்டி பகுதியில் செயல்படும் ஸ்ரீ காமாட்சி சேவா சங்கம் அறக்கட்டளை மைதானத்தில் “ராஜாவின் இசை ராஜாங்கம்“ என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூரில் முதன் முறையாக, 100 கைதேர்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் பிரபல கலைஞர்களுடன் மேஸ்ட்ரோ இளையராஜா மேடையேறி, பிரமாண்டமான சிம்போனிக் அனுபவத்தை வழங்கினார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சுமார் 15,000க்கும் மேற்பட்ட இளையராஜாவின் ரசிகர்கள் கண்டு களித்தனர்.

இதற்காக பல்வேறு நிலைகளில் ஒரு நபருக்கு 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img