fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியது பிரசன்னா கியா

கோவையில் ‘ஆல் நியூ’ கியா செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தியது பிரசன்னா கியா

நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடனும் செயல்படும், இந்தியாவின் முன்னணி 10 கியா டீலர்களில் ஒன்றான பிரசன்னா கியா நிறுவனம், கோவையில் ஆல்-நியூ கியா செல்டோஸ் காரை அறிமு கப்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி, ஊட்டி, திருப் பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண் டல பகுதிகளுக்கு முழு மையான சேவையினை வழங்கி வரும் பிரசன்னா கியா நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறை யில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்ப டையாகக் கொண்டு, நுகர்வோரால் அதிகம் நம்பப்படும் ரீடெய்ல் வணிக நிறுவனம் என்ற விருதையும் பெற்றுள்ளது.

கம்பீரமான வடி வமைப்பு, நவீன தொழில் நுட்பம் மற்றும் இந்த பிரிவு கார்களில் முன் னணி பாதுகாப்பு அம்சங் களுடன், பிரீமியம் ஷிஹிக்ஷி கார்கள் பிரிவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி உள்ளது ஆல் -நியூ கியா செல்டோஸ். சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ள இந்த கார், செயல்திறன். சொகு சான பயணம் மற்றும் புது மைகள் ஆகியவற்றின் சிறந்த கலவையாக திகழ்கிறது.
ஆல் நியூ கியா செல் டோஸ் சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் சிக்கன மான என்ஜின் வகைகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் மாடல்கள் ரூ.10.99 லட்சம் முதல், டீசல் மாடல்கள் ரூ.12.59 லட்சம் முதல் விற்பனை ஆகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகை களும் இந்த பட் ஜெட்டில் சிறப்பான மதிப்பை வழங்குவதால், புதிய கியா செல்டோஸ் அதன் பிரிவில் மிகவும் கவர்ச்சிகரமான தேர்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த வகை கார் களின் பிரிவில் முன்னணி அம்சங்கள், மேம்பட்ட கிஞிகிஷி தொழில்நுட்பம், பிரீமியம் உட்புற வடிவமைப்பு மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவம் ஆகியவற்றுடன், செல்டோஸ் அதன் விலை வரம்பில் சிறந்த மதிப்புள்ள எஸ்யூவியாக தனித்து நிற்கிறது.

கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து பிரசன்னா கியா ஷோரூம்களிலும் டெஸ்ட் டிரைவ் மற் றும் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இப் போது ஆல் -நியூ கியா செல்டோஸ் காரினை நேரடியாக ஓட்டிப் பார்த்து வாங்கி மகிழ லாம். எதிர்பார்ப்பதை விட உண் மையிலேயே அதிகமான வசதிகளை உள்ளடக்கிய ஒரு பிரிமியம் புதிய கியா செல்டோஸ் காரினை இயக்கும் அனுபவத்தை பெற்று மகிழ்ந்திட ஆட்டோ மொபைல் ஆர்வலர் களையும், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் அழைக்கிறது பிரசன்னா கியா ஷோரூம்.

படிக்க வேண்டும்

spot_img