fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

தமிழ்நாடு மனை தொழில் செய்வோர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் பங்கெடுத்து வரும் மனை தொழில் செய்வோரின் நலன்களை செயல்படுத்தும் விதமாக அண்மையில், தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நலச்சங்கம் எனும் அமைப்பு துவங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நல சங்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு தொகுதியிலும் கிளை அமைப்புகள் துவங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மனைத்தொழில் செய் வோர் நலச்சங்கத்தின் கிளை அமைப்பாக தொண்டாமுத்தூர் தொகுதி அமைப்பு துவங்கப்பட்டது.

இதற்கான துவக்க விழா மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் சுண்டாக்க முத்தூர் பி.ஆர்.மகால் அரங்கில் நடைபெற்றது.

தொண்டாமுத்தூர் தொகுதி கிளை தலைவர் கௌரி சங்கர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொருளாளர் லட்சுமணன், செய லாளர் கணேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன்னதாக நடைபெற்ற மருத்துவ முகாமை விமான நிலையம் ஆலோசனை குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கோகுலம் நிறுவன குழும நிர்வாக இயக்குனர் ஆர்.கே.ரவிக்குமார், கிரீன் சிட்டி மெடிக்கல் நாராயணன் தமிழ்நாடு மனைத் தொழில் செய்வோர் நல சங்கத்தின் தலைவர் ராக்கி கிருஷ்ணன் மற்றும் செயல் தலைவர்.டாக்டர் ஜி முகமது ரஃபீக், பொதுச் செயலாளர் ராம வெங்கடேசன், பொருளாளர் மயிலை செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து தொண்டாமுத்தூர் தொகுதி கிளை அமைப்பு புதிய நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பேசுகையில், “தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் மனை தொழில் செய்வோருக்கு என தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு மனை தொழில் செய்வோருக்கு தொகுப்பு வீடுகளை வழங்க முன்வர வேண்டும்“ என்றனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் திருமூர்த்தி,கவுன்சிலர்கள் முருகேசன், ராயப்பன் மற்றும் மகாலிங்கம், லயன்ஸ் அருள்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img