fbpx
Homeபிற செய்திகள்‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ - 24-ம் தேதி முதல் விண்ணப்பம் பதிவு: நீலகிரி ஆட்சியர்...

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ – 24-ம் தேதி முதல் விண்ணப்பம் பதிவு: நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண் ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடை பெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: நியாயவிலைக் கடைப் பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும் பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப் பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை.

குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப் பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்துப் பெறத் தேவையில்லை.

விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப் பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண் ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

ஒரு குடும்பத்தில் ஒன் றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந் தால் அவர்களும் குடும்பத் தலை விகளாகக் கருதப்படுவர்.

சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுப் பாட்டு அறை தொலைபேசி எண். 0423 – 2450034 மற்றும் 0423 – 2450035.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்கள்

முதல் கட்டமாக 24.07.2023 முதல் 04.8.2023 வரை உதகை வருவாய் வட்டத்தில், ஆடாசோலை, முத்தொரை, அம்மனட்டி, நஞ்சநாடு, கல்லக்கொரை, பைகமந்து, வெல்பேக் அண்ணா நகர், எம்.பாலடா, அப்புக்கோடு, கப்பதொரை, எல்லகண்டி, சின்கோனா, குழிசோலை, இந்து நகர், கெங்கமுடி, எப்பநாடு, இடுஹட்டி, மொரகுட்டி, அகலார், குருத்துகுளி, கவர்னர் சோலை, பார்சன்ஸ் வேலி, மேல் கவ்வட்டி, கீழ் கவ்வட்டி, குன்னூர் வருவாய் வட்டத்தில், கரன்சி, கோடமலை, பர்லியார், கம்பிசோலை, பேரட்டி, பாரத்நகர், அம்பிகாபுரம், கரிமரா ஹட்டி, கார்டைட் பேக்டரி கூட்டுறவு, சிங்காரா எஸ்டேட், நீலகிரி கூட்டுறவு நிறுவனம் ஆடர்லி எஸ்டேட், கோத்தகிரி வருவாய் வட்டத்தில் பர்ன்சைடு, கொணவக்கரை, ஆடுபெட்டு, கொட்டகொம்பை, பெத்தளா, குஞ்சப்பனை, கோழிக்கரை, வார்விக் எஸ்டேட், ஹாவுக்கல், கூட்டாடா எஸ்டேட், குண்டாடா, செம்மனாரை, கெங்கரை, மகளிர் ஹிட்டக்கல், பையங்கி, குந்தா வருவாய் வட்டத்தில் பேலிதளா, எமரால்டு கடை-2, தேவர்சோலை, கண்ணேரிமந்தனை, கீளுர், நுந்தளாமட்டம், மீக்கேரி, பால கொலா, துளிதலை, பி.மணியட்டி, நுந்தளா, பெம் பட்டி, புதுஹட்டி, இத்தலார், தங்காடு, டி.ஓரநள்ளி, பந்தலூர் வருவாய் வட்டத்தில் சேரம்பாடி, எருமாடு, கொளப்பள்ளி-1, கொளப்பள்ளி-2, சேரங்கோடு செக்போஸ்ட், வென்ட்;வொர்த், கொளப்பள்ளி(மகளிர்), சேரங் கோடு, சேரம்பாடி பஜார், சேரம்பாடி சுங்கம், கள்ளிச்சால், எருமாடு, கையுன்னி, அய்யங் கொல்லி, குறிஞ்சி நகர், பஞ்சக்கொல்லி, வெட்டுவாடி, கொளப்பள்ளி, போத்துகொல்லி, பனஞ்சரா ஆகிய கிராமங்களின் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

உதகை நகராட்சிப் பகுதியில் ஹாஸ்பிடல் ரோடு, காந்தள் பஜார், காமதேனு மிஷினரி ஹில், நிய 10 மார்கெட், பாம்பே கேஸ்டல், அப்பர் பஜார், கார்டன் ரோடு, கிரீன் பீல்டு, ஆர்.கே.புரம், செ.மேரிஸ் ஹில், சூப்பர் மார்கெட்-1, சூப்பர் மார்கெட்-2, நொண்டிமேடு,

மார்கெட் போஸ்ட்-1, மார்கெட் போஸ்ட்-2, முள்ளி கொரை, மெயின் பஜார்-1, காந்தல்-1, காந்தல்-2, பிங்கர் போஸ்ட்-1, கோடப்பமந்து, பெர்ன் ஹில், லவ்டேல்-1, பிங்கர்போஸ்ட்-2,

மஞ்சணக்கொரை, ஹெட் போஸ்ட் ஆபிஸ் கேம்பஸ், ரோஸ்மவுண்ட், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை-1இ தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை-2இ தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலை-3இ புதுமந்து, தலையாட்டுமந்து, பட்பயர், காந்தல், குன்னூர் நகராட்சிப் பகுதியில் அப்பர் குன்னூர், உமரி காட்டேஜ், டென்ட் ஹில், காந்திபுரம், கேஷ் பஜார், மினி சூப்பர் மார்கெட், வண்டிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அப்பர் குன்னூர், சந்திரா காலனி, ஓட்டுப்பட்டரை, வசம்பள்ளம், ரயில்வே கூட்டுறவு பண்டக சாலை, ஆழ்வார்பேட்டை, வேல் மகளிர் சுய உதவிக் குழு கிருஷ்ணாபுரம், கூடலூர் நகராட்சிப் பகுதியில் துப்புக்குட்டிபேட்டை, சுங்கம்(மகளிர்), செவிடிப்பேட்டை, அப்பர் கூடலூர், அத்திப்பாலி, அல்லூர், தொரப்பள்ளி, 1வது மைல், நடு கூடலூர், 2வது மைல், இராஜகோபாலபுரம்-1. ராஜகோபாலபுரம்-2, வண்டிப்பேட்டை, மார்த்தோமா நகர், நந்தட்டி, சளிவயல், கோழிப்பாலம்,

காசிம்வயல், சுங்கம்(நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை), மேல் கூடலூர், இராஜகோபாலபுரம், புத்தூர்வயல், செம்பாலா, நெல்லியாளம் நகராட்சிப் பகுதியில் பந்தலூர், கூவமூலா ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.
குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிப் பகுதியில் சிங்காரத்தோப்பு, பெல்லட்டி மட்டம், வண்டிசோலை, வெலிங்டன், ஜெயந்தி நகர், கோபாலபுரம்-1, கோபாலபுரம்-2, சட்டன் எஸ்டேட், காட்டேரி டேம், பிக்கோல், அதிகரட்டி, முட்டிநாடு, கொல்லிமலை, கோ டேரி, மகளிர் சுய உதவிக்குழு கூர்கா கேம்ப், கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிப் பகுதியில் டானிங்டன், அம்பேத்கர் நகர், கட்டபெட்டு-1, பெட்டட்டி, கட்ட பெட்டு-2, தலைமையகம், லோயர் பஜார், அப்பர் கோத்தகிரி, டானிங்டன், கண்ணேரிமுக்கு, திம்பட்டி, கிருஷ்ணாபுதூர், வெஸ்ட் புரூயஅக்,

மார்க்கெட், கேர்பெட்டா எஸ்டேட், நெக்கிகம்பை, அன்னை மகளிர், அதிகரட்டி பேரூராட்சிப் பகுதியில் தாம்பட்டி, கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிப் பகுதியில் தேவர்சோலை-1, தேவர்சோலை-2, தேவர்சோலை, தேவன், நெம்பர் 3 டிவிசன், மே பீல்டு எஸ்டேட், செறுமுள்ளி, புளியம்பாறை ஆகிய நியாய விலைக் கடைப் பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும்.

படிக்க வேண்டும்

spot_img