கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூர், செங்குளம் பகுதியில் தடுப்புச்சுவர் மற்றும் தார் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ரமேஷ், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.