கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்ட பத்தில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவை சினிமா நடிகை மகாலட்சுமி மற்றும் பெண் தொழிலதிபர்கள் காவேரி பிரியா நிஷா சிங்கர்அனிதா சீனிவாசன் ஹர்ஷிதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் வகைகள் மற்றும் ஆடைகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை கோ கிளைம் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா ராகுல்ஆகியோர் செய்திருந்தனர்.