கோவை கொடிசியா அரங்கில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்காட்சியை கண்டு தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், நிர்மலா மகளிர் கல்லூரியின் சார்பில் 666 மாணவிகள், 10 பேராசிரியர்களுடன்
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் உதவியுடன் கொடிசியா சென்றனர். தொடர்ந்தவர்கள் புத்தக கண்காட்சியைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் அவர்கள் ஏராளமான புத்தகங்களை வாங்கிப் பயன்பெற்றனர். இதில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மகேஸ்வரி, உதவிப் பேராசிரியர்களான ராமதிலகம், கவிதாதேவி, சகோதரி விண்ணரசி, இலக்கிய சங்கீதா, ஆனந்தி, சங்கீதா, பிரியா, நந்தினி, தேன்மொழி உள்ளிட்டோரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.