fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை காந்திபுரம் ஜிபி சிக்னலில் அலர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் கம்பெனி இணைந்து மாநகர காவல் உதவியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் போர்ட் மோட்டார் கம்பெனி ஊழியர்கள், பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ASET அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த அலர்ட் கோல்டன் ஆர்மி தன்னார்வ தொண்டர்கள் இணைந்து சாலையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்த நபர்கள் மற்றும் பிற சாலை விதிகளை கடைபிடித்த நபர்களுக்கு இனிப்புடன் சேர்ந்த வாழ்த்து மடல்கள் வழங்கினர்.

இதில் சாலை விதிகளை கடைபிடிக்காத நபர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய குறிப்புகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் வேஷத்தில் அறிவுரைகள் சொல்லபட்டது.

படிக்க வேண்டும்

spot_img