கோயம்புத்தூர், டாக் டர் என்.ஜி.பி. கலை மற் றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வணிக மேலாண்மைத் துறையின் சார்பில் தொழில் தொடங் குவதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ஆண்டுதோறும் “என்ஜிபி எக்ஸ்போ” என்ற நிகழ்வினை நடத்திவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் கடந்த 16ம் தேதி அன்று காலை 9.30 மணி அளவில், என்ஜிபி எக்ஸ்போ-2023
நிகழ்வை கல்லூரியின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அரங்குகள்
இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட வணிக ரீதியிலான அரங்குகள் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் அவர்கள், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், சந்தைபடுத்துவதற்கான உத்திகள், விற்பனை திறன்கள், வணிக நுட்பங்கள், சந்தை பகுப்பாய்வு, சந்தை போட்டி திறன்கள், தலைமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளுதல், குழுவாக ஒருங்கிணைந்து செயலாற்றும் தன்மைகள் குறித்த பல்வேறு பயன்களை பெற்றனர்.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் என 6000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழாவினை வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் முனைவர் சு.மோகன் ஒருங்கிணைத்து நடத்தினார்.