fbpx
Homeபிற செய்திகள்ஜெம் மருத்துவமனையுடன் ஜாகோ ஹெல்த் நிறுவனம் கைகோர்ப்பு

ஜெம் மருத்துவமனையுடன் ஜாகோ ஹெல்த் நிறுவனம் கைகோர்ப்பு

ஜாகோ ஹெல்த் நிறுவனம் ஜெம் மருத்துவமனையுடன் ஒரு புதிய கூட்டாண் மையின் தொடக்கத்தை அறிவித்தது. ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, ஜாகோ நிறுவன சேவைகளை ஜெம் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழித்தல் டிஸ்சினெர்ஜியா மற்றும் மலம் அடங்காமை போன்ற நிலைமைகளுக்கு அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சையைத் தேடி மருத்துவமனைக்குச் செல்லும் பல நோயாளிகள் இதன் மூலம் பயன டைவார்கள்.

ஜாகோ ஹெல்த் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சார்லஸ் ஜேசுதாசன், சண்முக பிரியன், ஷியாம் ராமமூர்த்தி , உமா வெங்கடேசா, கார்த்திகேயன் பி மற்றும் ஜெம் மருத்துவமனை மருத் துவர்கள் டாக்டர் எஸ்.அசோகன், டாக் டர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டிலேயே முதன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான ஜெம் மருத்துவமனையுடன் இணைந்திருப்பது ஜாகோ ஹெல்த் நிறுவனத்திற்கு ஒரு பெருமையான தருணம். ஜாகோ நிறுவன சேவைகள் ஜெம் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது

ஜாகோ நிறுவனதிற்கு பின்னால் இருக்கும் மருத்துவக் குழுவின் திறமை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை அங்கீகரிப்பதாகும் என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img