fbpx
Homeபிற செய்திகள்கோவை கனரா வங்கி கிளைகளில் வீடு - வாகனம் கடன் திருவிழா தொடங்கியது

கோவை கனரா வங்கி கிளைகளில் வீடு – வாகனம் கடன் திருவிழா தொடங்கியது

கனரா வங்கி சார்பில் கோவையில் உள்ள அதன் கிளைகளில் மாபெரும் வீடு – வாகனங்கள் வாங்குவதற்கான கடன் திருவிழா இன்று (17ம் தேதி) காலை தொடங் கியது.

நாளையும் (18ம் தேதி) இந்த கடன் திருவிழா நடைபெறுகிறது.
தடாகம் ரோடு ஜிசிடி அருகில் உள்ள கனரா வங்கியின் வீட்டுக்கடன் பிரிவு-I,, சத்தி ரோடு ராமகிருஷ்ணாபுரம் ப்ரோசோன் மால் எதிரில் உள்ள கணபதி கிளை-I,, திருச்சி சாலை சிங்காநல்லூர் கிளை-II, அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள PSG CAS கிளை, கோவைபுதூர் கிளை, தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள புரூக் பாண்ட் ரோடு கிளை ஆகியவற்றில் இந்த கடன் திருவிழா நடைபெற்று வருகிறது.

குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாதத்தவணை

இதில், 8.85 சதவீத வட்டியில் வீட்டுக்கடனையும் 9.10 சதவீத வட்டியில் வாகனக் கட னையும் பெறலாம். வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். பிற வங்கிகளில் வாங்கிய வீட்டுக்கடனை குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாதத்தவணையில் மாற்றிக் கொள்ளலாம்.

நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களை பெற, மேற்கண்ட கனரா வங்கி கிளைகளுக்கு முறையே, 70101 28023, 94890 43518, 94861 85953, 94890 43519, 94890 43578, 94422 03574 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த கடன் திருவிழாவில் பங்கேற்று பயனடையுமாறு வாடிக்கையாளர்களை கனரா வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img