வேதபாடசாலை குரு குலம், மாணவர்களுக்கு 7 ஆண்டுகள் கால அளவில் சமஸ்கிருதம், ரிக் வேதம், கிருஷ்ண யஜுர்வேதம் ஆகியவற்றில் விரிவான கற்பித்தல் திட்டத்தை வழங்கி வருகிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும், சரத்கால நவராத் திரி மகா உற்சவம் மிகுந்த பக்தி, சிறப்புடன் 10 நாட்கள் வேதபாடசாலையில் நடை பெறுகிறது.

இந்த ஆண்டு உற்சவம் 22.09.2025 முதல் 02.10.2025 வரை நடைபெற்றது.
விழாவின் ஒரு பகுதியாக, திருவீதியுலா கடந்த வியாழக் கிழமை, 2ம்தேதி பொது மக்கள் தரிசனத்திற்கு நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நடன மற்றும் இசைக்குழுக்கள் கலாச்சார நிகழ்ச்சிகளை அழகாக ஆற்றினர்.

இதில் கேரளா குழுக்களின் தேயம், கருடன் நிருத்தம், திரையாட்டம், கும்மாட்டி, புலிகலி, தேவி நிருத்தம், தெய்வ பூர்ண காயரூபம், தம்போலம், வீதி நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும் தமிழ்நாடு குழுக்களின் புலியாட்டம், பொய்க்கால் குதிரை கர்நாடக குழுக்களின் டோல்லு குனித, விர்கேஷ் குனித, கரடே கொம்பே ஆகியவை இடம் பெற்றன. இந்த ஆண்டு நடைபெற்ற சரத்கால நவராத்திரி மகா உற்சவத்திற்கு காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்தினர், சிறுவர், மூப்பினர்கள் உள்ளிட்டோர் ஆர்.எஸ்.புரம் முழுவதிலும் இருந்து திரளாக கலந்து கொண்டு இந்த மகத்தான விழாவை கண்டுகளித்தனர்.

முழு உற்சவமும், திரு வீதியுலாவும் ரவிசாம் வேத பாடசாலை மேலாண்மை அறங்காவலர், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகி யோரின் அர்ப்பணிப்புடன் நடத்தப்பட்டது.



