fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்காவில் தேசிய வனவிலங்கு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்காவில் தேசிய வனவிலங்கு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோவை அருகிலுள்ள ஆனைகட்டி பகுதியில் அமைந்துள்ள நீலகிரி உயிர்கோளம் இயற்கை பூங்கா (NBNP) வளமான உயிரிசைவினை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் கல்வி, ஆய்வு மற்றும் நிலைத்தன்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் மையமாகவும் இது திகழ்கிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அக்டோபர் 2 முதல் 8 வரை நடைபெறும் தேசிய வனவிலங்கு வார விழா நேற்று (அக்டோபர் 3) பூங்கா வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதோடு, இயற்கை சார்ந்த செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

இதில், வழிகாட்டியுடன் கூடிய பறவைகள் பார்வையிடுதல், வனவிலங்கு புகைப்படப் போட்டி, மற்றும் வனவிலங்கு புகைப்படம் தொடர்பான சிறப்பு உரை இடம்பெற்றது.

புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹரிஷ் வெங்கட்ராமன் நிகழ்வில் கலந்துகொண்டு புகைப்படக் கலையின் முறைகள், நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வில் புகைப்படங்களின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சி நிறைவில், போட்டியில் தேர்வான சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img