பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் அட்சயா மந்திர் மேல்நிலைபள்ளியின் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.
தொடர்ந்து திட்ட அலுவலர் சிவானந்தன் நாட்டு நலப்பணித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக பேசினார்.
இதில் உதவி திட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், முதுகலை கணித ஆசிரியர் சக்திதாசன், வணிகவியல் ஆசிரியர் சல்மான்கான் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



