கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் “கோட்பாட்டிலிருந்து நடைமுறைக்கு மில்லி மீட்டர் அலை மற்றும் நவீன பயன்பாடுகளுக்கான டெராஹெர்ட்ஸ் ஆண்டெனாக்கள்” என்ற தலைப்பில் ஒரு வார தேசிய அளவிலான பயிற்சி பட்டறையை நடத்தியது.
இந்த பயிற்சி பட்டறை நவீன தகவல் தொடர்பு அமைப்புகளில் மில்லிமீட்டர் அலை மற்றும் டெராஹெர்ட்ஸ் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.
வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் மில்லிமீட்டர் அலை மற்றும் டெராஹெர்ட்ஸ் ஆண்டெனாக்களின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை ஆராய்ந்து, அதிலுள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளை கற்க இந்த பட்டறை வழிவகுத்தது.
பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிவியல் சோதனையில் ஈடுபட்டு தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது பற்றி கற்றனர்.



