Homeபிற செய்திகள்ராஜபாளையத்தில் சிவகாமிபுரம் தெரு சாலியர் சமுதாயக் கூடத்தில் இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்

ராஜபாளையத்தில் சிவகாமிபுரம் தெரு சாலியர் சமுதாயக் கூடத்தில் இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்

ராஜபாளையத்தில் உள்ள சிவகாமிபுரம் தெரு சாலியர் சமுதாயக் கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம், இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் நடைபெற்றது.

முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற கண் மருத்துவர் சித்ராவை பாராட்டி சாலியர் சமூக தலைவர் குருபாக்கியம் நினைவு பரிசு வழங்கினார்.

இந்த முகாமில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை மருத்துவர் ஜெய பாஸ்கர், கலுசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விக்னேஷ் ஆகியோர் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். மருத்துவர் சுந்தர் பாலாஜி அறுவை சிகிச்சை தேவை ப்படும் நபர்களுக்கு இலவ சமாக ஆலோசனை வழங்கினார்.

கண் மருத்துவர் சித்ரா மற்றும் அரசு மருத்துவமனையின் சீனியர் கண் மருத்துவ உதவியாளர்கள் ஆறுமுகம், அழகர் ராஜ், பால்ராஜ் ஆகியோர் கண் அறுவை சிகிச்சைக்கு 6 பேரை பரிந்துரை செய்தனர்.

முகாமில் 140 பேர் பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் உப தலைவர் மன்னன் மற்றும் அன்னை சந்தியா கண் தான கழக நிறுவனர் நாகலட்சுமி பால்ராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img