fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் இந்தியா 333 நாட்கள் நிரந்தர வைப்புநிதி திட்டம் துவக்கம் 7.90 சதவீதம் வட்டி...

பேங்க் ஆஃப் இந்தியா 333 நாட்கள் நிரந்தர வைப்புநிதி திட்டம் துவக்கம் 7.90 சதவீதம் வட்டி கிடைக்கும்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, அதன் கவர்ச்சிகரமான 333 நாட்கள் கொண்ட குறைந்த கால “ஸ்டார் தன்விருத்தி நிரந்தர வைப்புத்தொகை” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் மிக மூத்த குடிமக்களுக்கு (சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்) 7.90% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75% சதவீத வட்டியும் மற்றவர்களுக்கு 7.25% வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட மூன்று அம்சங்களை உள்ளடக்கிய “ஸ்டார் தன்விருத்தி நிரந்தர வைப்புத்தொகை” திட்டத்தில் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் வசதி உள்ளது. தேவைப்பட்டால் முன்கூட்டியே வைப்புத் தொகையை திரும்பப் பெறும் வசதியும் உண்டு.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. 333 நாட்கள் ஸ்டார் தன் விருத்தி நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தில் பணம் டெபாசிட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் இந்தியா கிளைகளை நேரில் அணுகலாம். அல்லது பாங்க் ஆஃப் இந்தியா ஆம்னி நியோ செயலியைப் பயன்படுத்தி டெபாசிட் செலுத்தலாம்.
சலுகையுடன் கூடிய இந்த நிரந்தர வைப்புத் திட்டத்தில் டெப்பாசிட் செய்து பயனடையுமாறு வங்கியின் கோவை மண்டல மேலாளர் பி.சம்பத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img