பிஎஸ்ஜி மேலாண்மை நிறுவனம் (பிஎஸ்ஜிஎம்) தனது 2023-2025ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
விழாவில் முக்கிய விருந் தினராக அமெரிக்காவின் நார்தர்ன் கென்டக்கி பல் கலைக்கழகத்தின் புரொ வோஸ்ட் மற்றும் கல்வி தொடர்பான நிர்வாகத் தலைவர் டாக்டர் டையானா மெகில் கலந்து கொண்டு எம்.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ–வேஸ்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் சோஷியல் என்ட்ரபிரனர்ஷிப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும், யுனிவர்சிட்டி ஆஃப் டோலிடோ வின் டீன் டாக்டர் ஆன்ன் எல். பலாச் மற்றும்
நார்தர்ன் கென்டக்கி பல்கலைக்கழகத்தின் டீன் டாக்டர் ஹஸ்ஸன் ஹஸ்ஸப்எல்நபி தங்களது பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
விருந்தினர்கள் அனை வரும், மாணவர்கள் ஒரு தொழில்முறை மேலாளராகவும், சமூகத்திற்கு நற்பணியாற்றும் நற்செயலாளராகவும் உருவாக வேண்டியது அவசியம் என் பதை வலியுறுத்தினர்.
விழாவுக்கு பி.எஸ்.ஜி. கேர் இயக்குநர் டாக்டர் ஆர். ருத்ரமூர்த்தி தலைமை தாங்கினார். பி.எஸ்.ஜி.ஐ.எம் இயக்குநர் டாக்டர் வி ஸ்ரீவித்யா வரவேற்புரை வழங்கினார்.



