ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் நந்தா டிராபி 2025 விளையாட்டு விழா நடைபெற்றது.
நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.
காவல் துணை கண்காணிப்பாளர் எம்.வசந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் ரகுபதி, அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலர்கள் எஸ் நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆர்.சதிஸ்குமார் பரிசுகளை வழங்கினர்.



