fbpx
Homeபிற செய்திகள்டேலண்ட் எக்ஸ்போ நிறைவு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

டேலண்ட் எக்ஸ்போ நிறைவு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு எல்.வி.எஸ் கண்மருத்துவமனை கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சிப்பள்ளி சார்பாக ஈரோட்டில் 12 மணி நேரங்கள் நடைபெற்ற கின்னஸ் சாதனை டேலண்ட் எக்ஸ்போ விழா ஸ்ரீ கிருஷ்ணா மஹால் வளாகத்தில் நடைபெற்றது. கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார்.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் படித்து வரும் 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிறைவு விழாவில் வீட்டுவசதி அமைச்சர் சு. முத்துசாமி பங்கேற்று சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் ஈரோடு நாடளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், சந்திரகுமார் கலந்துகொண்டனர். கவிதாலயம் மகளிர் அணித்தலைவி வெண்ணிலா பெரியசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img