fbpx
Homeதலையங்கம்நாட்டிற்கே வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம்!

நாட்டிற்கே வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம்!

இளம் தலைமுறையினரிடையே கல்வியைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் ஊக்கம் கொடுக்கும் சமூக நீதிக்கான சரித்திர நாயகராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவரது நான் முதல்வன் திட்டம் சிறந்து விளங்குகிறது.

சமீபத்தில் ஜி 20 கல்விக்குழு மாநாடு சென்னையில் இரு நாள்கள் நடைபெற்றது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் திரளாக பங்கேற்ற இந்த மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய கல்வித் துறை செயலர்கள் சஞ்சய் மூர்த்தி (உயர்கல்வி), சஞ்சய்குமார் (பள்ளிக்கல்வி) ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிறந்த கல்வியை உலகம் முழுவதும் பரிமாறிக் கொள்வதற்கும், சவால்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வதற்கும், ஜி20 மாநாடு வழிகாட்டுதலாக அமையும்.

வருங்காலத்தில் கல்வித் துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும். கடந்த 15 ஆண்டுகளாக கல்வித் துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது சுணக்கமாக உள்ளது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டத்தை மற்ற மாநிலங் களிலும் செயல்படுத்த பரிந்துரை செய்யப்படும்“ என்றனர்.

நான் முதல்வன் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அங்கீகரித்ததன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முதலிடத்தில் கிரீடம் சூட்டிக் கொண்டு விட்டது.

தமிழ்நாடு அரசின்மீது எப்பொழுதும் குற்றச் சாட்டுகளை அடுக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் “நான் முதல்வன்” திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இனி மேலாவது தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சிறந்த கல்விக் கொள்கைக்கு தேசியக் கல்வி என்ற பெயரில் இடையூறு செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img