fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு

அவினாசிலிங்கம் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு

கோவை அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் 2024-ம் ஆண்டிற்கான ஆராய்ச்சி மாநாடு டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. “பல்துறை சார்ந்த ஆராய்ச்சி அணுகுமுறைகள்” என்ற பொருண் மையில் இந்த ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவில், அவி னாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க. மீனாட்சி சுந்தரம் தலைமையுரை ஆற்றினார்.
இதில் அவர், தர ஆராய்ச்சி யின் முக்கியத் தேவையை வலியுறுத்தினார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர், அறிஞர்கள் ஒரு தொலைநோக்கு பார்வைத் திட் டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, சிறப்பு விருந்தினர் இந்திய விண்வெளித்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞான பொறியாளர் M.S.சாந்தி, மனிதகுலத்தை மேம்படுத்துவதில் தங்கள் ஆராய்ச்சியை மையப்படுத்த அறிஞர்களை ஊக்குவித்தார்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இந்து வாழ்த்துரை வழங்கினார்.

தொடக்க விழா வரவேற்புரையை ஆய்வு மைய இயக்குநர். முனைவர் லலிதா வழங்கினார். நன்றியுரையை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத் தின் வணிகவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் விமலா, வழங்கினார். ஆராய்ச்சி மாநாட்டில் 7 புலங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img