ஈரோடு மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பும் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான யுவா உத்சவ் போட்டிகள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தனிநபர் அறிவியல் கண்காட்சி செயல்திட்டப் போட்டியில் ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர் யு.ஏ.உவைஸ் முதல் பரிசு ரூ.3000, தனிநபர் மொபைல் புகைப்படப் பிரிவில் அப்துல் காதர் இரண்டாம்பரிசு ரூ1500 பெற்றனர். அவர்ளைப் பள்ளியின் தாளாளர் சு.ஆ.தேவராஜா, முதல்வர் மு.மைதிலி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.