பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.

இதில் 6ம் வகுப்பு முதல் முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் சிந்தனை திறன், புதிய படைப்பாற்றல் திறமைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இக்கண்காட்சி மாணவர்கள் தம்முடைய எதிர்காலத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதியவற்றை ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.

நாடு முழுவதும் இருந்து சுமார் 80 பள்ளிகளிலிருந்து சுமார் 600 பள்ளி மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். இவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களது புதுமையான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் மிகவும் சிறப்பான புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்திய ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு க்யூசாட் நிறுவனம் இஸ்ரோ சென்று வருவதற்கான வாய்ப்பினையும் வழங்கியது.
முன்னதாக நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தவர்களை பார்க் கல்வி குழுமங்களின், கண்டுபிடிப்பு மற்றும் பிளேஸ்மெண்ட், இயக்குனர் டாக்டர். எம். பிரின்ஸ் வரவேற்று விழா பற்றிய விபரங்களை எடுத்துரைத்தார். பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி சிறப்புரையாற்றினார். தலைவர் டாக்டர். பி.வி. ரவி தலைமையுரை ஆற்றினார்.
தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளை வழங்கி பேசினார்.
இதில் பார்க் கல்வி குழுமங்களின் ஏரோநாட்டிக்கல் பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்த ஒரு செயற்கைக்கோள் சோதனை முயற்சியாக ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு சிறப்பு விருந்தினர் டாக்டர். நம்பினாராயணன் முன்னிலையில் சோதனை முயற்சியாக பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



