கரூரை அடுத்த தளவாய் பாளையத்தில் செயல்படும் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் கரூர் சக்தி அரிமா சங்கத்தின் சார்பாக கல்லூரியின் லியோ சங்க பெயர் பொறிக்கப்பட்ட இளம் அரிமா பதாகை வழங்கும் விழா நடைபெற்றது.
சக்தி லயன் சங்கத்தின் சாசன தலைவர் ஜெயா பொன்வேல் பெயர் பதாகையை பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், அறங் காவலர் சுபாஷினி அசோக் சங்கர் ஆகியோரிடம் வழங்கினார். பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமை வகித்தனர். கரூர் சக்தி லயன் சங்க தலைவர் திலகவதி, செயலாளர் வனிதா, பொருளாளர் சாந்தி மற்றும் சக்தி லயன் சங்க முன்னாள் தலைவர்கள் கவிதா கார்த்தீசன், லட்சுமி மணி, சாந்தி லக்ஷ்மி, மஞ்சு ரமேஷ், சாந்தா, ஆண்டாள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சாந்தி வரவேற்றார். லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார். இறுதியில் பெயர் பதாகை கல்லூரியின் லியோ சங்கத் தலைவர் மாணவி சண்முகப்பிரியா, செயலாளர் அகல்யா, பொருளாளர் சந்தியா ஆகியோரிடம் ஒப்படைக் கப்பட்டது.
கல்லூரியில் படிக்கும் போதே அரிமா சங்கம் மூலமாக நாட்டிற்கு பயன் தரும் பலவகையான சேவைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்திட இந்நி கழ்வு மாணவ – மாணவிகள் இடையே உத்வேகத்தை ஏற்படுத்தியது.



