கடம்பூரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 வயது பிறந்த நாள் விழா, கடம்பூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது ஏழை எளிய பெண்கள் 47 பேருக்கு சேலையும், 47ஆண்களுக்கு வேஷ்டியும் வழங்கப்பட்டது.
முன்னதாக ராட்சத கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிதம்பராபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் கண்டி சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிரதிநிதி சுதந்திர ராஜ், கிளைச் செயலாளர் முருகன் நர்சிங்பெருமாள், ஜெயராஜ், மாரியப்பன், மனோராஜ், கடம்பூர் பேரூராட்சி மன்ற ஐந்தாவது வார்டு கவுன்சிலர் மதியழகன், நகர மகளிர் அணி தலைவி வலதியம்மாள், துணை தலைவிமுத்துமாரி, மற்றும் நிர்வாகிகள் தங்கவெயிலாட்சி, சிவகாமி, மாரியம்மாள்,தனலட்சுமி , தூய்மை பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.