டெல்லியில் தேசிய பால பவனில் குழந்தைகள் கலைநிகழ்ச்சி கடந்த நவம்பர் 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்கள் நடைபெற்றது.
மத்திய கல்வி இயக்குனர் முக்தா அகர்வால் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் கலை நிகழ்ச்சிகளில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் திருநெல்வேலி கலை பண்பாடு மையம் சார்பில் தென்காசி மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற சிலம்பம் ஆசிரியர் வீரபாண்டியன் தலைமையில் மாணவர்கள் பங் கேற்றனர்.
இதில் சந்தோஷ், மதுகிருஷ்ணன், கிரிஸ் குமார், இன்பரசன் ஆகியோர் சிலம்பாட்டத்தில் அனைவரின் பாராட்டுகளை பெற்றனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தேசிய ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மாணவர்களும், பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.