fbpx
Homeபிற செய்திகள்அண்ணா பல்கலை. புத்துளிர் மாநில அறிவியல் போட்டி: கரூர் பரணி பார்க், வித்யாலயா இளம் விஞ்ஞானிகள்...

அண்ணா பல்கலை. புத்துளிர் மாநில அறிவியல் போட்டி: கரூர் பரணி பார்க், வித்யாலயா இளம் விஞ்ஞானிகள் மாநில அளவில் சாதனை

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையே பல்வேறு பிரிவுகளில் மாநில அளவிலான புத்துளிர் -2024 அறிவியல் புத்தாக்கத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பள்ளிகள் பங்கு பெற்றன.

இந்த அறிவியல் புத்தாக்கப் போட்டிகளில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பிரிவில் கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி இளம் விஞ்ஞானிகள் தீபிகா, வீணா, நிஷிதா குழு ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நவீன தொழில் நுட்பம்’ என்ற அறிவியல் ஆய்வு மாநில அளவில் இரண்டாம் ரன்னர் அப் பரிசு பெற்று ரூ.5000க்கான காசோலையை பெற்றது.

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் பிரிவிலும் கரூர் பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி இளம் விஞ்ஞானிகள் சஞ்சய், நித்திஷ், பிரஜன் குழு ‘டிஜிட்டல் டிடாக்ஸ்’ என்ற அறிவியல் ஆய்வு மாநில அளவில் இரண்டாம் ரன்னர் அப் பட்டம் பெற்று ரூ.5000- க்கான காசோலை வென்று அபார சாதனை படைத்துள்ளனர்.

ஒரே கல்விக்குழுமத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் மாநில புத்தாக்க அறிவியல் திருவிழாவில் பரிசுகள் வென்று கரூர் மாவட்டத்திற்கு மாநில அளவில் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதுமதி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மைய இயக்குனர் அம்பலவாணன் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அறிவியல் புத்தாக்க ஆய்வுகளில் அபார சாதனை படைத்த கரூர் பரணி பார்க், பரணி வித்யாலயா இளம் விஞ்ஞானிகளை ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.5000- க்கான காசோலை, வெற்றிச் சான்றிதழ் பரசளித்து பாராட்டினார்.

மாநில அளவில் சாதனை படைத்த கரூர் பரணி பார்க், பரணி வித்யாலயா இளம் விஞ்ஞானிகளுக்கு கரூரில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளர் மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர்கள் சுதாதேவி, சேகர், துணை முதல்வர் பிரியா, புத்தாக்க அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்கள் முனைவர் ராமச்சந்திரன், செல்வப்பிரியா மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் சாதனை மாணவ, மாணவியர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img